தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் தங்களை வழக்கறிஞர்களாக ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெங்களூர் நகரானது ரியல் எஸ்டேட் துறையில் எல்லை தாண்டிய முதலீடுகளுக்குச் சிறந்த ஆசிய பசிபிக் நகரங்களின் பட்டியலில் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.
இந்த தரவரிசையானது CBRE தெற்காசியா லிமிடெட் ஆலோசனை நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஆசியா பசிபிக் முதலீட்டாளர் நோக்கக் கணக்கெடுப்பில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் ஸ்மார்ட் மோட்டார் சைக்கிளானது ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளளது. 4G மின்னணு சிம்கார்டு பொருத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளானது இந்தியாவில் முதல் செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளாகும்.
மத்திய அரசானது தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகத்தை (National River Conservation Directorate - NRCD) சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்துப் பிரித்து ஜல் சக்தி அமைச்சகத்துடன் இணைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் புத்துயிராக்கம் செய்யும் பொறுப்பை ஜல் சக்தி அமைச்சகம் கொண்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்கைட்ராக்ஸ் உலக விமான விருதுகள் மற்றும் மிக உயர்ந்த விருதான “உலகின் சிறந்த விமான நிறுவனம்” உள்ளிட்ட 4 விருதுகளைப் பெற்றுள்ளது.
இதனுடன் வரலாற்றில் 5 முறை (2011, 2012, 2015, 2017 & 2019) இவ்விருதினைப் பெற்ற ஒரே விமான நிறுவனமாகவும் இது திகழ்கிறது.
எத்தியோப்பியாவின் தலைநகரமான அடிஸ் அபாபா நகரத்தில் குற்றங்களைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நகரின் தெருக்களில் மோட்டார் சைக்கிள்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீனாவானது இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சில பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மாநிலமான விக்டோரியாவானது கடுமையாக நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து செலுத்தி கருணைக் கொலைச் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டத்தினை இயற்றியுள்ளது.
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 1000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையினை நியூசிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் நிகழ்த்தியுள்ளார்.
இவர் 17 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையினை எட்டியுள்ளார்.
இதற்குமுன் இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் இந்திய வீரர் ரோஹித் சர்மா (18 இன்னிங்ஸ்கள்) ஆவார்.