“சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை” நிர்வகிப்பதற்கு வேண்டி அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான ஒரு திட்டம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
தர்பன் தளத்தில் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தப் பின்னர், அவர்களால் ரூ. 5 லட்ச நிதியைக் கோர முடியும்.
ஸ்ரீ தத்தா பிரசாத் ஜோக் என்பவரால் எழுதப்பட்ட “கீத இராமாயணத்தின்” இந்திப் பதிப்பை அரசின் பதிப்பகப் பிரிவு வெளியிடும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு தண்ணீர் விநியோக மற்றும் வடிகால் வாரியமானது (TWAD - Tamil Nadu Water Supply and Drainage Board) தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் விரிவான வட்டார அளவிலான வரைபடத்தைத் தயாரித்துள்ளது.
இது மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்காக நீர் உள்ள இடங்கள் ஆகியவற்றிற்கான தகுந்த பகுதிகளைக் காட்டுகின்றது.