TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 3 , 2019 1977 days 761 0
  • இந்தியாவின் மேம்பாட்டுப் பொருளாதாரத்திற்கான பல்துறை ஆராய்ச்சித் திட்டமான “Stride” (Scheme for Trans-disciplinary Research for India’s Developing Economy’) என்ற ஒரு புதிய திட்டத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இது கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தாய்லாந்தின் பாட்டயாவில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான வைபவ் யாதவ் என்பவர் தாய்லாந்தைச் சேர்ந்த பாக்பெட்ச் சிங்மானாசாக் என்பவரை வீழ்த்தி WBC ஆசிய வெள்ளி வெல்டர்வெய்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
    • இந்தக் குத்துச் சண்டையானது உலக குத்துச் சண்டை மன்றத்தினால் (World Boxing Council - WBC) ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆசியக் குத்துச் சண்டை ஆணையத்தினால் நடத்தப்பட்டது.
  • பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரிடமிருந்து பி.எஸ்சி செவிலியர் பட்டத்தைப் பெற்ற முதலாவது மூன்றாம் பாலினத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஷிகா ராஜ் ஆவார்.
  • ஹரியானா மாநில அரசு, தனது வடக்குப் பகுதி மாவட்டங்களில் “ஜல் ஹி ஜீவன் ஹய்” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது ஒரு பயிர்ப் பன்மயமாக்கத் திட்டமாகும். இது நெல் விளையும் பகுதிகளை குறைவாக நீர் தேவைப்படக் கூடிய சோளம், அர்ஹர் டால் (துவரம் பருப்பு), மற்றும் சோயா அவரை போன்றப் பயிர்களைப் பயிரிடும் பகுதிகளாக மாற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்