TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 6 , 2019 1842 days 611 0
  • இத்தாலியின் நப்போலியில் நடைபெற்ற 30-வது உலகப் பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர் இளவேனில் வளரிவான் என்பவர் 10 மீ துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
    • இளவேனில் இளையோர் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மூன்று முறை பெற்றுள்ளார்.
  • கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் மற்றும் போரில் பங்கேற்றவர்களுக்கு கௌரவம், மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக கார்கில் போரின் 20-வது ஆண்டு நினைவின் போது இராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஒரு சிறப்பு அஞ்சலிப் பாடல் வெளியிட்டுள்ளார்.
    • இது புகழ்பெற்ற இந்திக் கவிஞரான சமீர் அஞ்சன் என்பவரால் இசையமைக்கப்பட்டு சதாத்ரு கபீர் என்பவரால் பாடப்பட்டது.
  • வங்க தேசத்தின் டாக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மையம் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF - International Monetary Fund) தற்போதையத் தலைவரான கிறிஸ்டினி லகார்டே என்பவர் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு தலைமை வகிக்கும் முதலாவது பெண்மணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டில் IMF-ன் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்மணி இவராவார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது “உன்னுடைய வாடிக்கையாளர்களை அறிந்து கொள்” என்பதற்கான விதிமுறைகள் மற்றும் நடப்புக் கணக்குகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை சரியாகக் கடைபிடிக்காததற்காக 4 பொதுத் துறை வங்கிகள் மீது 1.75 கோடி அபராதத்தை விதித்துள்ளது.
    • பஞ்சாப் தேசிய வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இந்த 4 வங்கிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்