ஹாலிவுட் நடிகரான லியோனர்டோ டிகாப்ரியோ என்பவர் “புவிக் கூட்டிணைவு” என்ற ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காக செல்வமிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கொடையாளர்களான லாரின் பவுல் ஜாப்ஸ் மற்றும் பிரெய்ன் சேத் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
இது பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் பூர்வகுடிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஆதரவளித்தல், வனவிலங்கு மற்றும் சூழலியல் அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக சர்வதேச அளவில் பணியாற்றும்.
இஸ்ரோவினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் பயன்களைக் கையாளுவதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா என்ற ஒரு நிறுவனம் விண்வெளித் துறையின் கீழ் ஒரு புதிய வணிகப் பிரிவாக இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவினால் பொருட்கள் மற்றும் சேவைகளைச் சந்தைப்படுத்துவதற்காக 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலாவது வணிக நிறுவனம் ஆந்திரிக்ஸ் நிறுவனமாகும்.
சீன வீரரான லீ ஷீ பெங் என்பவர் கனடா ஓபன் பேட்மிண்டனின் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். இவர் இப்பட்டத்திற்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பருபல்லி கஷ்யப் என்பவரை வீழ்த்தினார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்காக மூன்று ஆண்டு காலத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMA - International Monetary Fund) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் வரவு செலவுச் சமநிலையின் (Balance of Payment) பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக இந்த நிதியுதவியின் படி, அந்நாட்டிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் உடனடியாக வழங்கப்பட விருக்கின்றது.
அமெரிக்காவின் உள்துறையானது “பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை” (BLA - Balochistan Liberation Army) ஒரு சிறப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தியது போன்ற காரணத்திற்காக BLA மீது குற்றம் சாட்டப்படுகின்றது.