ஹார்மஸ் நீர்ச் சந்தியில் உள்ள அபு முசா தீவுகளுக்கு அருகில் பிரித்தானிய எண்ணெய்க் கப்பலை கைப்பற்ற ஈரான் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் உரிமைக் கோரப்படும் அபு முசா தீவானது தற்போது ஈரானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவானது இந்திய ஆவணப் படத் தயாரிப்பாளர் கூட்டமைப்புடன் இணைந்து “KSHITIJ” எனும் ஆவணப்பட மன்றம் ஒன்றை மும்பையில் தொடங்கியது.
அஜய் & விஜய் பேடியின் புகழ்பெற்ற ஆவணப் படமான “Secret Life of Frogs” தொடக்க படமாகத் திரையிடப்படும்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற 10வது உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சியில் 11வது உலகத் தமிழ் மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கலைச் சிறப்பிற்கான டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா தேசிய விருதான “முரளி நடா லஹாரி” என்ற விருதானது பின்னணிப் பாடகரான S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதானது கர்நாடக சங்கீதப் பாடகரின் பிறந்த நாளில் பாரதிய வித்யா பவன் மற்றும் M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை நடத்திய பாலமுரளி நடா மஹோத்சவ் 2019 இன் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது.
தென்கொரிய மகிழுந்துத் தயாரிப்பு நிறுவனமான “ஹுண்டாய்” நிறுவனம் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் “கோனா எலக்டரிக்” எனும் தனது சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வாகனம் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 425 கி.மீ. ஓட்ட அளவை உறுதியளிக்கும்.
ஹவாயின் பிக் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியின் பெயரால் 'கோனா எலக்ட்ரிக்’ என இதற்குப் பெயரிடப்பட்டது.
அமெரிக்க நிபுணத்துவ பேஸ்பால் விளையாட்டுகளில் “அட்லாண்டிக் லீக்” என்றழைக்கப்படும் அணியால் முதன்முறையாக ரோபோக்கள் நடுவர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய நாட்டவரான அன்ஷீலா காந்தை அதன் அடுத்த தலைவர் மற்றும் தலைமை நிதியியல் அலுவலராக (CFO – Chief Financial Officer) நியமிக்கப் பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுவானது அறிவித்துள்ளது. இவரே உலக வங்கியின் முதல் பெண் CFO ஆக இருப்பார்.
இவர் முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் CFO ஆக இருந்தவர் ஆவார்.
ஜப்பானின் ஹயபுசா-2 விண்கலமானது தொலைதூர குறுங்கோள் மீது சரியான இறங்குதலை மேற்கொண்டுள்ளது. சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்துப் பல தகவல்களை அளிக்கக் கூடிய இந்த முதலாவது திட்டமானது அதன் பரப்பிலிருந்து அடியிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கவுள்ளது.
விண்வெளியில் சந்திரனை விட தொலையில் உள்ள ஒரு விண்வெளிப் பொருளின் பரப்பிலிருந்து மாதிரிகளை சேகரிப்பது இதுவே முதன்முறையாகும்.
87 மில்லியன் பயனாளர்களுக்குச் சொந்தமான தகவல்களைப் பிரித்தானிய அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுடன் இரகசியமாகப் பகிர்ந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அரசானது முகநூலுக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.