TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 14 , 2019 1966 days 668 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படவில்லையெனில் இந்தியாவிற்கு எதிரான “301 விசாரணை” துவக்கப்படுவது குறித்து அமெரிக்கா ஆராயும் என்று அமெரிக்க வர்த்தகத்திற்கானத் துணைப் பிரதிநிதி அறிவித்துள்ளார்.
    • “301 விசாரணை” என்பது ஒரு நாட்டிற்கு எதிராக அதிக வரிகள் மற்றும் பிற கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாக அமெரிக்காவினால் நடத்தப்படும் ஒரு விசாரணையாகும்.
  • இந்திய நாட்டில் 10.38 கோடிக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாழ்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 1.54 கோடி மூத்த குடிமக்கள் உள்ளனர். இதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 1.11 கோடி மூத்த குடிமக்கள் உள்ளனர்.
    • வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மூத்த குடிமக்களுக்காக ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா என்ற ஒரு திட்டம் 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப் படுகின்றது.
  • மூன்றாம் பாலினத்தவர்கள், தாங்களாகவேப் பதிவு செய்து பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சமூக நல மற்றும் சத்துணவுத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்