TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 16 , 2019 1832 days 619 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் மாதிரி குத்தகைச் சட்டம், 2019ற்கான வரைவை வெளியிட்டுள்ளது.
    • இது சந்தை சார்ந்த அணுகுமுறையால் வாடகை வீடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் குத்தகைதாரர்கள் & நில உரிமையாளர்கள் ஆகியோரின் கடமைகளை வகுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய எண்ணெய் நிறுவனத்தின் வருடாந்திர விளையாட்டுகள் மாநாட்டில் ஆண்டின் விளையாட்டு வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான சரத் கமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இதே வகையைச் சேர்ந்த முதலாவது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கான சர்வதேசக் கருத்தரங்கு இலண்டன் நகரில் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் கனடா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கு உலகம் முழுவதும் பத்திரிக்கைச் சுதந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • இந்தக் கருத்தரங்கு பிரசார் பாரதியின் தலைவரான சூரியப் பிரகாஷ், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வபன தாஸ் குப்தா மற்றும் பத்திரிக்கைக் குழுவின் உறுப்பினரான காஞ்சன் குப்தா ஆகியோரால் கலந்து கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்