இந்திய விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத் (திருத்த) மசோதா, 2019 ஆனது மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டது. இது மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டி நிலுவையில் உள்ளது.
இது முக்கியமான விமான நிலையங்களில் வருடாந்திர பயணிகளின் எண்ணிக்கையை தற்பொழுது உள்ள 15 இலட்சத்திற்குப் பதிலாக 35 இலட்சமாக வரையறுக்கின்றது.
ஒசானியாவின் 500 தீவுகளில் ஒன்றான பலாவு தீவுக் கூட்டமானது 121 நாடுகளைக் கொண்ட சர்வதேச சூரிய ஒளிக் கூட்டிணைவில் (International Solar Alliance - ISA) 76வது நாடாக இணைந்துள்ளது. ISA ஆனது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளால் கூட்டாக இணைந்து 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது குறித்து மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/international-solar-alliance/.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் “உன்னுடைய வியக்கத் தகுந்தவற்றைக் கண்டறிதல்” என்ற பிரச்சாரமானது 2019 ஆம் ஆண்டின் பசிபிக் - ஆசியப் பயண மன்றத்தின் (Pacific Asia Travel Association - PATA) தங்க விருதை வென்றுள்ளது.
இந்தப் பிரச்சாரம் “சந்தையிடல் – அரசின் முதன்மைப் பயண இலக்கு” என்ற பிரிவின் கீழ் இந்த விருதை வென்றுள்ளது.