TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 21 , 2019 1928 days 642 0
  • மத்திய அரசின் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் சிறப்புத்துவத்திற்கான 3 விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.
    • போஷான் அபியான் திட்டமானது ஊட்டச்சத்துக் குறைபாடற்ற இந்தியாவை அடைவதற்காக 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பல அமைச்சகங்களுக்கிடையேயான ஒரு ஒருங்கிணைப்புத் திட்டமாகும்.
  • இந்திய மெட்ரோ இரயில் திட்டங்களின் வரலாற்றில் முதன்முறையாக, புனே மெட்ரோவானது அலுமினியத்தினாலான இரயில் பெட்டிகளைப் பெறவிருக்கின்றது. இது நாள்வரை, நாட்டில் உள்ள மெட்ரோக்கள் துருப் பிடிக்காத எஃகினாலான இரயில் பெட்டிகளைப் பயன்படுத்துகின்றன.
    • அலுமினியப் பெட்டிகள் குறைந்த எடை, சிறந்த ஆற்றல் திறன் மற்றும் சிறந்த அழகியல் திறன் கொண்டதாக இருக்கின்றன. இவை கொல்கத்தாவில் தயாரிக்கப்பட இருக்கின்றன.
  • 9 நாட்கள் நடைபெறும் தேசியப் பழங்குடியினத் திருவிழாவான “ஆதி மகா உற்சவம்” ஆனது ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து லே - லடாக்கின் போலோ  மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது இந்திய அரசின் மத்திய பழக்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) ஆகியவற்றினால் இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • ஒரு புதிய நேரடி வரிச் சட்டத்தை உருவாக்குவதற்கான அகிலேஷ் ரஞ்சன் பணிக் குழுவானது தனது அறிக்கையையும் வருமான வரிச் சட்டத்தின் புதிய முன்மொழியப்பட்ட பதிப்பின் வரைவையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ளது.
  • காங்கோ மக்களாட்சிக் குடியரசில் எபோலா தொற்றுநோய் பரவுதலின் போது நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் REGN-EB3 மற்றும் MAb114 ஆகிய மருந்துகள் இந்தத் தொற்று நோயினால் ஏற்படும் இறப்புகளை வியக்கத்தகு வகையில் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஜெர்மனியில் உள்ள திரெஸ்தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய சுய அளவீட்டு லென்சுகளற்ற (கண்ணாடி வில்லை) அக நோக்கியை வடிவமைத்துள்ளனர். இது ஒரு ஒற்றை உயிரணுவை விடச் சிறியதாக பொருட்களின் ஒரு முப்பரிமாண உருவத்தை உருவாக்குகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் UNFCCயின் உறுப்பினர் நாடுகளின் சந்திப்பை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பிரேசிலில் உள்ள சாப்பாலோவில் பேசிக் நாடுகள் (பிரேசில், தென் ஆப்பிக்கா, இந்தியா மற்றும் சீனா) காலநிலை மாற்றம் மீதான தனது அமைச்சகங்களுக்கிடையேயான 28வது சந்திப்பை நடத்தின.
  • ATP போட்டித் தொடரின் ஒரு முக்கிய போட்டியில் வெற்றி பெற்ற “முதலாவது காது கேளாத வீரராக” தென் கொரியாவின் லீ டக்-ஹீ என்பவர் உருவெடுத்துள்ளார்.
  • இவர் அமெரிக்காவின் வட கரோலினாவில் நடைபெற்ற வின்ஸ்டன் - சேலம் ஓபனில் சுவிட்சர்லாந்தின் ஹென்றி லாக்சோனென் என்பவரை வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்