ஒடிஸாவிலுள்ள 13 குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுள் (Particularly Vulnerable Tribal Groups) ஒன்றான மன்கிடியா பழங்குடியின குழுவிற்கு (Mankidia tribe) வரலாற்றுச் சிறப்புடைய அட்டவணை பழங்குடியினர் மற்றும் பிற வனவாசிகள் (வனஉரிமை அங்கீகாரத்திற்கான ) சட்டம் 2006-ன் கீழ் [Scheduled Tribes and other Traditional Forest dwellers (Recognition of forest Rights) Act-2006] ஒடிஸாவில் உள்ள சிமிலிபால் புலிகள் காப்பகத்தின் (Similipal Tiger Reserve) உட்பகுதிகளில் வாழ்வதற்கான உரிமை நீக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளால் குறிப்பாக புலிகளால் மன்கிடியா பழங்குடியின மக்கள் தாக்கப்படக் கூடும் என்ற காரணத்தின் அடிப்படையில் மாநில வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தலைமை நீதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, 2016-ஆம் ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதி வழங்கிய தன்னுடைய முந்தைய இடைக்காலத் தீர்ப்பை திருத்தியமைத்து ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் தேசிய கீதத்தை இசைப்பது திரையரங்கங்களின் விருப்பத்தைச் சார்ந்தது என தெரிவித்துள்ளது.
திரையரங்களில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாகR.ஷர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சகங்களுக்கிடையேயான குழுவின் பரிந்துரைகளை ஏற்று அது தொடர்பாக அரசு இறுதி முடிவை எடுக்கும் வரையில் உச்சநீதி மன்றத்தின் இந்த திருத்த உத்தரவு அமலில் இருக்கும்.