2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான கூட்டு வர்த்தகக் குழுவின் 9வது கூட்டத் தொடரானது புது தில்லியில் நடத்தப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று ஒரு நாள் நடைபெறும் தேசிய சுற்றுலாத் துறை அமைச்சர்கள் மாநாடானது புது தில்லியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.
“இனாலி கை” என்று அழைக்கப்படும் குறைந்த செலவு கொண்ட செயற்கையான கையை மேம்படுத்தியதற்காக NCPEDP MPHASIS உலகளாவிய வடிவமைப்பு விருது 2019 என்ற விருதை இந்தியாவைச் சேர்ந்த பிரசாந்த் காடே பெற்றுள்ளார்.
மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை மீதான தடையின் அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்காக கர்நாடக மாநில அரசு தனது பிரிவு ஏ நச்சு வகையின் கீழ் “நிக்கோடினை” இணைத்துள்ளது.
சயனோஜென், ஹைட்ரோசயனிக் அமிலம், நைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் பாஸ்ஜீன் போன்ற உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய அதிக நச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் அவை மிகக் குறைந்த அளவுகளில் இருந்தாலும் கூட அவை கர்நாடகாவில் பிரிவு ஏ நச்சுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமான (புதியதாக தொழில் தொடங்குதல்) செரபரஸ் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் 1.2 டிரில்லியன் டிரான்சிஸ்டர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய செயலியை (Processor) மேம்படுத்தியுள்ளது. இது செரபரஸ் சீவல் அளவு இயந்திரம் என்று அழைக்கப் படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலக தொழில்முனைவோர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவத்தின் அதிகாரத்தை மேம்படுத்துவத்தை அனுசரிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் “சர்பத் செகாத் பீமா யோஜனா” என்று அழைக்கப்படும் ஒரு தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது முன்பே இருக்கும் நோயையும் உள்ளடக்கியுள்ளது. இது ஏறத்தாழ 46 இலட்ச குடும்பங்களுக்கு பயனளிக்கின்றது.
முன்னாள் காவல் துறை கூடுதல் ஆணையர் மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் தற்போதைய உறுப்பினரான B.N.S. ரெட்டி என்பவர் சீனாவின் செங்குடுவில் நடைபெற்ற உலகக் காவல் துறை மற்றும் தீ சார்ந்த விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.