சமீபத்தில் மகாராஷ்டிராவின் புப்கானில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு (Archaeological Survey of India - ASI) மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது விதர்பா பகுதியில் இரும்புக் கால நாகரீகத்திற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளது.
இந்த இடமானது தபி நதியின் துணை நதியான பூர்ணா நதிக்கு அருகில் அமைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் உலகப் பொருளாதார மன்றத்தினால் நடத்தப்படும் இந்தியப் பொருளாதார மாநாட்டிற்கு வங்க தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா ஆகியோர் இணைந்து தலைமை தாங்க விருக்கின்றனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான விக்ரம் ரத்தோர் இந்தியக் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சஞ்சய் பாங்கருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பரத் அருண் மற்றும் R.ஸ்ரீதர் ஆகியோர் முறையே பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களாக நீட்டிக்கப் பட்டுள்ளனர்.