2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரக்கம் மீதான முதலாவது உலக இளைஞர் கருத்தரங்கைப் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இக்கருத்தரங்கானது அமைதி & நீடித்த வளர்ச்சிக்கான யுனெஸ்கோ மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
பக்ரைனின் மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணா ஆலயத்தின் மறுமேம்பாட்டுத் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசர்களிடமிருந்து 2 புகழ்பெற்ற அரசு விருதுகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
பக்ரைன் : மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணை. ஐக்கிய அரபு அமீரகம் : சயீத்தின் ஆணை.
மரபணு மாற்றப்பட்ட தட்டைப் பயிரின் திறந்தவெளி சாகுபடிக்கு ஒப்புதல் வழங்கிய முதலாவது நாடாக நைஜீரியா உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பு நைஜீரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈரானின் அதிபரான ஹாசன் ரவ்கானி “பாவர் - 373” என்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை, அவர்களுடைய இராணுவத்தில் இணைத்துள்ளார்.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக வில்வித்தை இளையோர் சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான இளையோர் அணிப் பிரிவில் சுக்பீர் சிங், சங்கம் பிரீத் சிங் பிஸ்லா மற்றும் துசர் பாட்டேர் ஆகியோரைக் கொண்ட இந்திய அணியானது “வெண்கலப் பதக்கத்தை” வென்றுள்ளது.
இந்தியாவின் “ஒற்றுமைக்கான சிலை” மற்றும் மும்பையில் உள்ள “சோஹோ இல்லம்” ஆகியவை டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் சிறந்த 100 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலானது இடங்களைப் பார்வையிட, தங்க, உணவு உட்கொள்ள மற்றும் தேநீர் அருந்த ஆகிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.