TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 27 , 2019 1790 days 602 0
  • கர்நாடகாவில் முதன்முறையாக, அம்மாநிலமானது கோவிந்த் எம் கர்ஜோலா, டாக்டர் அஸ்வத் நாராயணா மற்றும் லட்சுமண் சாவாடி ஆகிய மூன்று துணை முதலமைச்சர்களைப் பெறவிருக்கின்றது. இவர்கள் மூவரும் எடியூரப்பாவின் அமைச்சரவையில் (கேபினெட்) துணை முதலமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • மும்பையில் 2019 ஆம் ஆண்டின் லக்மி குளிர் கால ஆடைத் திருவிழாவில் நீடித்த ஆடைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்வதற்காக சூர் (SURE) என்ற ஒரு திட்டத்தை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தொடங்கியுள்ளார்.
    • SURE என்பது “நிலையான தீர்மானம்” (Sustainable Resolution) என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு தூய்மையான சூழலுக்குப் பங்களிக்கக் கூடிய ஆடையை நோக்கி நகர்வதற்கான தொழிற்துறையின் ஒரு உறுதிப்பாடாகும்.
  • பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு, தனது ஜன் அவுஷாதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படும் சுகாதாரத் துணிகளின் விலையை ரூ. 1 ஆகக் குறைக்க விருக்கின்றது. அங்கு விற்கப்படும் சுகாதாரத் துணிகளின் தற்போதைய விலை ரூ. 2.50 ஆகும்.
    • “சுவிதா” என்ற உயிரியால் சிதைவுறும் சுகாதாரத் துணிகள் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் மானிய விலையில் கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்