TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 28 , 2019 1789 days 513 0
  • இந்தியாவின் முதலாவது பெண் காவல்துறைப் பொது இயக்குநரான (Director General of Police - DGP) 1973 ஆம் ஆண்டு பணிப் பிரிவைச் சேர்ந்த இந்தியக் காவற் பணி அதிகாரி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா சமீபத்தில் காலமானார். இவர் 2004 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் DGPயாக நியமிக்கப்பட்ட போது வரலாறு படைத்தார்.
    • இந்தியாவின் இரண்டாவது பெண் இந்தியக் காவல் பணி அதிகாரியும்  இவரேயாவார்.
  • மகாராஷ்டிர அரசாங்கம் தனது புதிய தொழிற்துறைக் கொள்கையில், உள்ளூர் மக்களுக்கு மொத்தப் பணிகளில் 80 சதவிகிதப் பணிகளை அளிக்க வழி வகுக்கும் ஒரு புதிய “மண்ணின் மைந்தர்கள்” என்ற ஒரு பிரிவை வகுத்துள்ளது.
  • இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிக்கிடையே 10வது பேருந்துச் சேவை அறிவிக்கப் பட்டுள்ளது. இது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியை காத்மாண்டுடன் இணைக்கின்றது.
  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவானது விண்வெளியில் நிகழ்த்தப்பட்ட முதலாவது குற்றம் என்று கருதப்படும் குற்றம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருக்கின்றது.
    • விண்வெளி வீரர் அன்னே மெக்லைன் என்பவர் சர்தேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அடையாளத் திருட்டு மற்றும் தனது பிரிந்த மனைவியின் தனிப்பட்ட நிதிப் பதிவுகளைத் தவறாக அணுகியது ஆகியவற்றிற்காகக் குற்றம் சாட்டப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்