TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2018 2509 days 865 0
  • ஒடிஸாவிலுள்ள 13 குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுள் (Particularly Vulnerable Tribal Groups) ஒன்றான மன்கிடியா பழங்குடியின குழுவிற்கு (Mankidia tribe) வரலாற்றுச் சிறப்புடைய அட்டவணை பழங்குடியினர் மற்றும் பிற வனவாசிகள் (வனஉரிமை அங்கீகாரத்திற்கான ) சட்டம் 2006-ன் கீழ் [Scheduled Tribes and other Traditional Forest dwellers (Recognition of forest Rights) Act-2006] ஒடிஸாவில் உள்ள சிமிலிபால் புலிகள் காப்பகத்தின் (Similipal Tiger Reserve) உட்பகுதிகளில் வாழ்வதற்கான உரிமை நீக்கப்பட்டுள்ளது.
    • வன விலங்குகளால் குறிப்பாக புலிகளால் மன்கிடியா பழங்குடியின மக்கள் தாக்கப்படக் கூடும் என்ற காரணத்தின் அடிப்படையில் மாநில வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • தலைமை நீதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, 2016-ஆம் ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதி வழங்கிய தன்னுடைய முந்தைய இடைக்காலத் தீர்ப்பை திருத்தியமைத்து ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் தேசிய கீதத்தை இசைப்பது திரையரங்கங்களின் விருப்பத்தைச் சார்ந்தது என தெரிவித்துள்ளது.
    • திரையரங்களில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாகR.ஷர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சகங்களுக்கிடையேயான குழுவின் பரிந்துரைகளை ஏற்று அது தொடர்பாக அரசு இறுதி முடிவை எடுக்கும் வரையில் உச்சநீதி மன்றத்தின் இந்த திருத்த உத்தரவு அமலில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்