தன்மறைப்பு நிலையின் (Privacy) பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை களைய மெய்நிகர் அடையாளம் (Virtual ID) மற்றும் வரையறுக்கப்பட்ட KYC (Limited Know Your Customer) எனும் இரு அடுக்கு (two-tier) பாதுகாப்பு அம்சங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI-Unique Identification Authority of India) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் தரவுகளின் தன்மறைப்பு நிலையையும், அவற்றின் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்காக இந்த இரு பாதுகாப்பு அம்சங்கள் தொடங்கப்பட்டுள்ளன.