TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 4 , 2019 1783 days 657 0
  • சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து அகர்பத்தி மற்றும் பிற அதனை ஒத்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • இந்தப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்று வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
  • 2019-21 ஆம்  ஆண்டு கால கட்டத்திற்கான உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் (Association of World Election Bodies : A-WEB) தலைவராக இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பொறுப்பேற்றார். ருமேனியாவிடமிருந்து A-WEB சங்கத்தின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கின்றது. இந்தியா இரண்டு வருட காலத்திற்கு இந்தச் சங்கத்தின் தலைவராக பணியாற்ற இருக்கின்றது.
  • தேசியத் தலைநகரான புது தில்லியில் உள்ள குஜராத் அரசின் இரண்டாவது மாநில பவனான ‘கார்வி குஜராத்’ என்ற பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
    • தேசியத் தலைநகரில் உள்ள ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த’ முதலாவது மாநில பவன் இதுவே ஆகும்.
  • அசாமில் உள்ள இரண்டு கோயில்களின் குளங்களில் வளர்க்கப்படும் அரிய கருப்பு மென் ஓடு கொண்ட மற்றும்  இந்திய மென்  ஓடு கொண்ட சுமார் 70 ஆமைக் குஞ்சுகள் அசாமின் போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.
    • இதே போன்ற நிலப்பரப்பு மற்றும் இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் கணிசமான எண்ணிக்கைக் காரணமாக போபிடோரா வனவிலங்கு சரணாலயம் பெரும்பாலும் ‘சிறிய காசிரங்கா’ என்று அழைக்கப்படுகின்றது.
  • அசோக் லேலண்ட் நிறுவனம் தனது அனைத்து கனரக வாகனங்களிலும் பிஎஸ் - ஆறாம் உமிழ்வு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த முதல் இந்திய அசல் உபகரண உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
    • இது இந்திய தானியங்கி ஆராய்ச்சிச் சங்கத்திடமிருந்து (ARAI - Automotive Research Association of India) இணக்க சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
  • ஜப்பானிய எரிசக்தி நிறுவனமான புதிய சகாப்தத்திற்கான ஜப்பானின் எரிசக்தி நிறுவனத்துடன் (JERA - Japan’s Energy For a New Era) ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கூட்டாக 750 மெகாவாட் எரிவாயு அடிப்படையிலான ஒருங்கிணைந்த சுழற்சி மின் திட்டத்தை வங்காள தேசத்தின் மேக்னாகாட்டில் அமைக்க விருக்கின்றன.
  • ரிஷப் பந்த் என்பவர் 11 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். இந்தியாவிற்காக எம்.எஸ்.தோனி வைத்திருந்த முந்தைய சாதனையை (16) அவர் முறியடித்தார்.
    • அவரது 50வது விக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரெய்க் பிராத்வைட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்