TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 6 , 2019 1781 days 567 0
  • நெய்வேலியில் உள்ள செயின்ட் ஜோசப் ஆஃப் க்ளூனி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியின் முதுகலை விலங்கியல் ஆசிரியரான சுதா பிரசாத் என்பவர் மதிப்புமிக்க “ஃபுல்பிரைட் கற்பித்தல் சிறப்புத்துவ மற்றும் சாதனை” என்ற நிகழ்ச்சிக்காகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
    • அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இந்தியர்களில் இவரும் ஒருவராவார். தமிழ்நாட்டிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆசிரியர் இவராவார்.
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், தில்லிப் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்புமிகு கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
  • ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது பேரிடர்  மேலாண்மைத் துறையில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான கருத்தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக 2019 ஆம் ஆண்டின் சிறப்புமிகு தகவல் தொழில்நுட்ப விருதை வென்றுள்ளது.
    • இந்த விருதுக்கு “SATARK” (சக்திவாய்ந்த பேரிடர் அறிவை அடிப்படையாகக் கொண்ட பேரிடர் தகவல்களை மதிப்பீடு செய்தல், கண்காணித்தல் மற்றும் எச்சரிக்கை செய்வதற்கான அமைப்பு) என்ற செயலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பேரழிவைத் தடுக்கும் உள்கட்டமைப்புக்கான சர்வதேசக் கூட்டணியை (Coalition for Disaster Resilient Infrastructure - CDRI) பிரதமர் மோடி தொடங்கவுள்ளார்.
    • இதன் சர்வதேசச் செயலக அலுவலகம் புது தில்லியில் அமைக்கப்படும்.
  • தூர கிழக்கு ரஷ்யாவின் வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'கடன்சார்பு நிதியை’ இந்தியா தர இருக்கின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
    • ஒரு நாட்டின் “ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு” இந்தியா கடன்சார்பு நிதியை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
  • முதல் முறையாக, மாகாண போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஒரு இந்துப் பெண் பாகிஸ்தானின் சிந்து மாகாணக் காவல் துறையில் சேர்க்கப்பட்டுள்ளார். புஷ்பா கோலி என்ற அந்த இந்துப் பெண் உதவி துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்து சமூகத்தைச் சேர்ந்த பாகிஸ்தானியரான சுமன் பவன் போதானி என்பவர் உரிமையியல்  மற்றும் நீதித்துறை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்