TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 12 , 2019 1776 days 593 0
  • பிரதமரின் "முதன்மைச் செயலாளராக" P.K. மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பி கே சின்ஹாவை நியமனம் செய்ய நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் 2019  ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் கிராமப் புறங்களுக்குச் சிறந்த சாலை இணைப்பை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank - ADB) ஆகியவை 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation - DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட, ஏவிய பின் வழிகாட்ட முடியாத, மனிதனால் எடுத்துச் செல்லப்படக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை (Man Portable Antitank Guided Missile - MPATGM) ஆந்திராவில் உள்ள கர்னூல் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
    • இந்த ஏவுகணையானது மனிதனால் எடுத்துச் செல்லப்படக் கூடிய ஒரு முக்காலிச் சட்டகத்திலிருந்து ஏவப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியாவின் தூதர் பதவியிலிருந்து வெளியேறவிருக்கும் நவ்தீப் சிங் சூரி என்பவருக்கு இரண்டாம் சயீத்தின் முதல் வகுப்பு ஆணை என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • இந்த விருதானது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானால் வழங்கப்பட்டது. தனது பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நட்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தியதற்கும் வலுப்படுத்தியதற்கும் தனது பங்களிப்புகளை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக “ஜல் ஜீவன் திட்டத்தின்” கீழ் மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாயைச் செலவிடும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
    • ஜல் ஜீவன் திட்டமானது தண்ணீரைச் சேமிப்பது மற்றும் ஒருவரின் வீட்டிலேயே தண்ணீரை வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • அமேசான் மழைக்காடுகளில் “எலக்ட்ரோஃபோரஸ் வோல்டாய்” என்ற ஒரு புதிய மின்சார ஈல் (விலாங்கு மீன்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் 860 வோல்ட் மின்சாரம் வரை வெளியேற்றும் திறன் கொண்டது.
    • இது இதுவரை அறியப்படாத ஒரு வலிமையான உயிரி மின்சாரமாகும். முதலாவது மின்சார பேட்டரியின் வடிவமைப்பிற்கு மின்சார ஈல்கள் உத்வேகம் அளித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்