TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 13 , 2019 1774 days 671 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பல்கலைக்கழக மானியக் குழுவால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைத் திறன்களுக்கான பாடத் திட்டத்தை (ஜீவன் கௌசல்) அறிமுகப் படுத்தியுள்ளார்.
    • இந்த இளநிலைப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக தகவல் தொடர்புத் திறன், தனிநபர் சார்ந்த திறன், நேர மேலாண்மை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன், தலைமைத்துவத் திறன் மற்றும் ஒருமைப்பாடு போன்ற வாழ்க்கைத் திறன்கள் இருக்கின்றன.
  • ஒரு பசுவைத் தத்தெடுக்க விரும்புவோருக்காக நிகழ்நேர (ஆன்லைன்) சேவையைத் தொடங்க மத்தியப் பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கௌசாலாக்களில் (பசு முகாம்களில்) அந்தப் பசுக்களுக்கு இருப்பிடங்களை அளிக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    • நன்கொடையாளர்கள், மாநிலத்தில் ஒரு கௌசாலாவைத் தேர்ந்தெடுத்து பசுக்களின் உணவிற்கானத் தொகையைச் செலுத்தலாம்.
  • இந்தியக் கான்கிரீட் நிறுவனமானது தெலுங்கானாவின் காலேஸ்வரம் ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 2019 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கான்கிரீட் கட்டமைப்புச் சான்றிதழை வழங்கியதால் அது புதிய தனித்துவத்தைப் பெற்றுள்ளது.
    • இந்த விருதானது மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பெறப்பட்டது.
  • பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஒரு குழுவானது பத்திரிகைத் தணிக்கையில் மோசமாக செயல்படும் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் எரித்திரியா, வட கொரியா மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
    • சவுதி அரேபியா, ஈரான், வியட்நாம் மற்றும் சீனா ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர ஆசிய நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்