TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 14 , 2019 1773 days 626 0
  • தேஜாஸ் (கடற்படை விமானம்) என்ற இலகு ரகப் போர் விமானத்தின் முதலாவது “கட்டாயத் தரையிறக்கமானது" கோவாவில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா என்ற கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
    • இந்தச் சோதனையானது இந்த விமானத்தை இந்திய கடற்படை விமானம் தாங்கிக் கப்பலான விக்ரமாதித்யாவில் தரையிறக்கம் செய்ய வழி வகுக்கும்.
  • புகழ்பெற்ற இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாகக் கொண்டாடும் விதமாக 1953 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதியன்று இந்தி திவாஸ் (அல்லது இந்தி நாள்) அனுசரிக்கப்படுகின்றது.
    • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று இந்திய அரசியலமைப்புச் சபையானது தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப்பட்ட இந்தி மொழியை இந்தியக் குடியரசின் அலுவல்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
  • பெப்சிகோ இந்தியா நிறுவனம் தனது விளையாட்டின் போது அருந்தப்படும் குளிர்பானத்தின் பிரிவான கேடோரேட்டின் விளம்பரத் தூதராக இந்தியாவின் நட்சத்திர தடகள வீரரான ஹிமா தாஸை இணைத்துள்ளது.
    • இதன் மூலம் நாட்டின் விளம்பரத் தூதர்களாக இருக்கும் இறகுப் பந்தாட்ட வீரரான பி.வி.சிந்து மற்றும் ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ரா ஆகியோருடன் 19 வயதான ஹிமா தாசும் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்