TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 18 , 2019 1769 days 690 0
  • முன்னாள் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான பி.லட்சுமண ரெட்டி என்பவர் அம்மாநிலத்தின் முதலாவது லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியாகப்  பதவியேற்றுள்ளார்.
    • விஜயவாடாவில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆந்திரப் பிரதேச ஆளுநரான பிஸ்வபூசன் ஹரிசந்தன் என்பவரால் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
  • ஒடிசா கடற்கரையில் இருந்து "அஸ்திரா" என்ற ஏவுகணையை இந்திய விமானப் படை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது சுகோய் சு - 30 எம்.கே.ஐ என்ற போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டது.
  • மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த சாரா தாமஸ் என்பவர் ஆங்கிலக் கால்வாயை  நான்கு முறை 54 மணிநேரங்கள்  இடைவிடாமல் நீந்திய முதலாவது நபராக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்