TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 22 , 2019 1765 days 638 0
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் வார்தாவில் ‘தூய்மை பாரத உலகப் பல்கலைக் கழகத்தை’ அமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
    • சுகாதாரம், தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சி ஆய்வுகள் குறித்து இந்தப் பல்கலைக் கழகம் கவனம் செலுத்தும்.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சாகித்ய அகாடமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் பரோ ஆனந்த் “காந்தியாக  இருப்பது” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • லண்டன் மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள தென் சீனாவின் மாபெரும் சாலமண்டர் (ஆண்ட்ரியாஸ் ஸ்லிகோய்) உலகின் மிகப்பெரிய இருவாழ்வி என்று நம்பப் படுகின்றது.
    • அவை ஐந்து அடிக்கு மேல் நீளமும் 100 பவுண்டுகளுக்கு மேல் எடையும் கொண்டவையாகும்.
  • மாணவர்களிடையேப் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் சஞ்சாயிகா (பள்ளி வங்கி) தினம் கொண்டாடப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 அன்று உலக நீர்க் கண்காணிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • உள்ளூர் நீர்நிலைகளின் அடிப்படைக் கண்காணிப்பை மேற்கொள்ள குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்குவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, வருடாந்திர சர்வதேசப் பல்கலைக்கழக விளையாட்டு தினமானது  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்திர சர்வதேசப் பல்கலைக்கழக விளையாட்டு தினமானது விளையாட்டு, உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மூலம் பல்கலைக் கழகங்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்