TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2019 1759 days 837 0
  • புனேவில் உள்ள இந்திய தேசிய திரைப்படக் காப்பகமானது மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது மரணத்திலிருந்து பல முக்கியமான நிகழ்வுகளை விவரிக்கும் பல மணி நேரம் ஓடக்கூடிய திருத்தப்படாத காட்சிகளின் 30 சுருள்களைப் பெற்றுள்ளது.
    • பாராமவுண்ட், பாத்தே, வார்னர், யுனிவர்சல் மற்றும் பிரிட்டிஷ் மூவிடோன் மற்றும் இந்தியாவின் சொந்த இந்திய மூவிடோன் படப்பிடிப்புக் கூடம் போன்ற உலகின் புகழ்பெற்ற படப்பிடிப்புக் கூடங்களில் அவை படமாக்கப்பட்டன.
  • தில்லி உயர் நீதிமன்றமானது தனது சேவைகளை டிஜிட்டல் முறையில் அனைவருக்கும் வழங்குவதற்காக ஒரு அதிகாரப்பூர்வ கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது.
    • இந்தச் செயலியானது வழக்குகளின் நிலை, உயர் நீதிமன்றத்தின் காட்சிப் பலகை மற்றும் உயர் நீதிமன்ற வலைதளத்தின் பிற முக்கிய இணைப்புகளுக்கான அணுகல் ஆகிய விவரங்களைக் கொண்டிருக்கும்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research & Development Organisation - DRDO), பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஜம்மு மத்தியப் பல்கலைக் கழகம் ஆகியவை ஜம்மு பல்கலைக் கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கலாம் மையத்தை நிறுவுவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • விமானப் படையின் உயர் பதவிகளின் மறுசீரமைப்பில், விமானப் படைத் தளபதி எச்.எஸ்.அரோரா இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • செப்டம்பர் 30 ஆம் தேதியன்று விமானப் படைப் பணியாளர்களின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ்.படுரியாவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த இல்லத்தரசியான திருமதி பூஜா தேசாய் என்பவர்திருமதி இந்தியா (Mrs India- தேசத்தின் பெருமை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  • இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் தலைமைப் பாதுகாப்புப் படைப் பணியாளரின் தலைவராகப் (Chairman of Chiefs of Staff Committee - COSC) பொறுப்பேற்றுள்ளார்.
    • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற இருக்கும் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியான பி.எஸ்.தனோவாவிடமிருந்து அவர் COSCயின் வாளைப் பெற்றார்.
  • கனடாவில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டின் காமன்வெல்த் பளு தூக்குதல் (Powerlifting and Bench Press) சாம்பியன்ஷிப் போட்டிகளில் தற்போதைய ஆசிய பளு தூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற மற்றும் தேசிய சாம்பியனான சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி அருண் என்பவர் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
    • காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பிற்காக இந்திய அணியின் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து பங்கு பெற்ற ஒரே வீரர் இவராவார்.
  • காஷ்மீர் குங்குமப்பூவானது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக ரூபா குருநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த நியமனத்தின் மூலம், நாட்டில் மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்புக்குத் தலைவரான முதலாவது பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்