TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 30 , 2019 1757 days 665 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு விழாக் கூட்டத்தின் 50வது பதிப்பு சுவிட்சர்லாந்தின் டேவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2020ம் ஆண்டு ஜனவரி 21-24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • ஒடிசாவின் பெண்கள் & குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மிஷன் சக்தி துறையானது ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்துடன் இணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நோக்கதிற்காக டிக்கி மவுசி என்ற சின்னத்தை வெளியிட்டிருக்கின்றது.
    • இந்த சின்னத்தின் பெயரான டிக்கி மவுசி ஒரு குழந்தையின் இரண்டாவது அன்னையாகக் குறிப்பிடப் படுகின்றது.
  • சர்வதேச முட்டை ஆணையத்தின் புதிய தலைவராக இரண்டு ஆண்டு கொண்ட ஒரு பதவி காலத்திற்கு இந்திய முட்டை நிறுவனமான சீனிவாசா பண்ணைகள் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவரான சுரேஷ் சித்தூரி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
    • இந்த நிறுவனத்திற்கு ஆசியப் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவர் இவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்