TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 4 , 2019 1753 days 802 0
  • சென்னையில் உள்ள “இன்ஃபினிட்டி பூங்கா” என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புப் பூங்காவைப் பராமரிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியானது தமிழ்நாடு அரசிடமிருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
    • இந்தப் பூங்காவானது பொலிவுறு நகரங்கள் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 2 ஆம் தேதியன்று முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 113வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், அரசியல் ஆய்வாளரான சந்தீப் சாஸ்திரி என்பவர் "லால் பகதூர் சாஸ்திரி: அரசியல் மற்றும் அதற்கு அப்பால்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • முதன்முறையாக, இந்தியாவின் முதலாவது தனியார் ரயிலான லக்னோ - டெல்லி தேஜாஸ் விரைவு ரயிலின் பயணத்தின் போது ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த ரயில் பயணத்தின்போது ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஏற்பட்டால் ரூ 100 என்ற தொகையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்