TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 5 , 2019 1752 days 782 0
  • சென்னை நகரத்தின் மணலி, எண்ணூர் மற்றும் மீஞ்சூரில் உள்ள தொழிற்சாலைகள் சென்னைக்கு அருகில் உள்ள கொடுங்கையூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை எதிர்ச் சவ்வூடு பரவல் முறையிலான சுத்திகரிப்பு (tertiary treatment reverse osmosis - TTRO) ஆலையில் இருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர்கள் அளவிற்கு  சுத்திகரிக்கப்பட்ட நீரை விரைவில் பெற இருக்கின்றன.
    • சுத்திகரிக்கப்பட்ட நீரில் கரைந்துள்ள மொத்த திடப் பொருட்களின் அளவானது (total dissolved solids - TDS) 70க்கும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் குடிநீரில் TDS அளவானது 250 முதல் 500 வரை இருக்கும்.
  • பிஎஸ்என்எல் சமீபத்தில் மதுரையில் 4ஜி சேவைகளை அறிமுகப் படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள  கோவை, சேலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு நகரங்கள் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையைக் கொண்டிருக்கின்றன.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி “இந்தியாவுக்கும் உலகுக்கும் காந்தி ஏன் தேவைப்படுகிறார்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
    • இந்தக் கட்டுரையானது அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் ‘தலையங்கப்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக “பிரகாஷ்” (PRAKASH - Power Rail Koyla Availability through Supply Harmony) என்ற ஒரு இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • இந்தத் தளமானது மத்திய மின்சாரத் துறை அமைச்சரான ஆர்.கே. சிங் மற்றும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷி ஆகியோரால் கூட்டாக இணைந்து ஆரம்பித்து வைக்கப் பட்டது.
  • மஹிந்திரா நிறுவனம் 51% பங்குகளுடனும் ஃபோர்டு நிறுவனம் 49% பங்குகளுடனும் ஒரு கூட்டு நிறுவனத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன.
    • இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் ஃபோர்டு நிறுவன வாகனங்களை இந்தியாவில் உருவாக்கி, சந்தைப்படுத்தி விநியோகிப்பதற்கும் மற்றும் ஃபோர்டு நிறுவன & மஹிந்திரா நிறுவன வாகனங்களை உலகெங்கிலும் அதிக வளர்ச்சியை அடைந்து வரும் சந்தைகளில் உருவாக்கி, சந்தைப்படுத்தி விற்பதற்கும் ஒரு கூட்டுநிறுவன  முயற்சியை உருவாக்க இருக்கின்றது.
  • நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்காக, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இலங்கை அஞ்சல் துறையானது சமீபத்தில் ஒரு அஞ்சல் தலையையும் முதல் நாள் அட்டையையும் வெளியிட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதியன்று சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகின்றது.
    • சர்வதேச காபி நிறுவனம் இத்தாலியின் மிலன் நகரில் 2015 ஆம் ஆண்டில் முதல் காபி தினத்தை தொடங்கி அனுசரித்தது.
  • ராணுவ செவிலியப் பணியின் 94வது எழுச்சி தினம் அக்டோபர் 1 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
    • இது இந்திய இராணுவத்தின் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் ஒரு பகுதியாகும். மேலும் ஆயுதப் படைகளில் உள்ள ஒரே அனைத்துப் பெண்கள் படையினரும் இவர்களேயாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்