TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2019 1751 days 563 0
  • C.P.R. சுற்றுச்சூழல் கல்வி மையமானது (The C.P.R. Environmental Education Centre - CPREEC) சென்னை மாநகராட்சிப் பள்ளியின் ஆசிரியரான G. தங்கராஜ் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதினை வழங்கியது.
    • கடந்த இருபதாண்டுகளாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டியமைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர் வரதன் அகில இந்திய அளவில் அனைத்து 15 AIIMS நிறுவனங்களிலும் புதுச்சேரியின் ஜிப்மர் கல்வி நிறுவனத்திலும் 2020 ஆம் ஆண்டிலிருந்து இளங்கலைப் படிப்புகளான MBBS/BDS படிப்புகளில் மாணவர்கள் NEET மதிப்பெண்கள் மூலம் சேர்க்கப்படுவர் என அறிவித்துள்ளார்.
    • முன்னதாக அவை தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களாக இருந்தமையால் அவை NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவை தங்களது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திடத் தகுதி பெற்றிருந்தன.
  • திவால் மற்றும் நட்டக் குறியீடு 2016 என்ற குறியீட்டின் மாற்றியமைக்கப்பட்ட திருத்தத்தின் வரம்பிற்குள் வங்கி சாரா நிதியியல் நிறுவனங்களையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவிலான நபர்கள் கடன்களைப் பெற்றிட இயலச் செய்திடும் ஒரு முயற்சியாக ஒரு நபரின் கடன் பெறுவதற்கான வரம்பை 1 லட்சத்திலிருந்து 1.25 லட்சம் வரையில் அதிகரித்திட இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருக்கின்றது.
  • இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தனது 200வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையை மிக வேகமாக (44வது டெஸ்ட் போட்டி) அடைந்த இடதுகை பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கின்றார்.
  • உலக கற்றல் குறைபாட்டு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 4ம் தேதி அனுசரிக்கப் படுகின்றது. டிஸ்லெக்சியா எனப்படும் இது ஒரு கற்றல் குறைபாடு ஆகும்.
  • கத்தாரின் கலீபா மைதானத்தில் நடைபெற்ற IAAF உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் தாலிலாஹ் முகமது 400 மீட்டர்கள் தடை ஒட்டப் போட்டியில் முந்தைய தனது சாதனையை மறுபடியும் முறியடித்திருக்கின்றார்.  
    • அவர் தங்கப் பதக்கத்தை 52.16 விநாடிகள் என்ற சாதனை நேரத்தில் வென்றார்.
  • மறைந்த வரலாற்று ஆய்வாளரான S. முத்தையா எழுதிய, தமிழ்நாட்டின் விளையாட்டுக் கலை பற்றிய நவீன வரலாறு குறித்து ஒரு விரிவான பார்வையை வழங்குகின்ற “தங்கத்திற்கான தமிழ்நாட்டின் ஆராய்ச்சி” என்ற புத்தகமானது வெளியிடப் பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்