TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 7 , 2019 1750 days 621 0
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புது தில்லியில் தேசிய மின்னணு வரிக் கணிப்பு மையத்தை (NeAC - inaugurated National e-Assessment Centre) திறந்து வைத்தார். இதன் மூலம், வரிக் கணிப்பு செயல்பாட்டில் அதிக செயல்திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை ஏற்படுத்த வருமான வரித் துறை அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் மின்னணு வரிக் கணிப்பை வருமான வரித் துறை அறிமுகப் படுத்துகின்றது.
    • வரி செலுத்துவோர் மற்றும் வரித் துறை அதிகாரிகளுக்கு இடையில் எந்த விதமான நேரடியான தொடர்பும் இனி இருக்காது.
  • 1990 ஆம் ஆண்டில் ஜே.கே.எல்.எஃப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட படைத் தலைவரான ரவி கண்ணாவின் பெயரானது இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்குப் பின்னர் தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவருடைய பெயர் தற்செயலாக அங்கு சேர்க்கப்படாமல் இருந்தது.
    • 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காஷ்மீரில் ஜே.கே.எல்.எஃப் அமைப்பின் நிறுவனரான யாசின் மாலிக் என்பவரால் படைத் தலைவர் கண்ணா மற்றும் மூன்று இந்திய விமானப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
  • ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் குறுக்கு வாள் படைப் பிரிவானது இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரர்கள், போரின் போது கணவரை இழந்தவர்கள் (வீர் நாரிஸ்), விதவைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அக்னூரில் உள்ள தாண்டாவில் “வீர குடும்பப் பேரணி” என்ற ஓர் பேரணியை நடத்தியது.
    • 2019 ஆம் ஆண்டை “உற்றோர் உறவினர்களின் ஆண்டாக” அனுசரிக்கப்பட்டு வரும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்தப் பேரணியை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது.
  • ஹபீஸ் சயீத் மற்றும் அவருடன் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா மற்றும் பிற பயங்கரவாத குழுக்கள் ஆகிய அமைப்புகளுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1267ன் விதிகளை முழுமையாக செயல்படுத்த பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (Financial Action Task Force - FATF) ஆசிய பசிபிக் குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்