TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2019 1749 days 853 0
  • தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் ஆனது உலக சுகாதார அமைப்பின்   முன்னுரிமை பெற்ற மருத்துவ சாதனங்கள் மற்றும் சுகாதார தொழில்நுட்பக் கொள்கைக்கான ஒத்துழைப்பு மையமாக மறுநியமனம் செய்யப்பட்டது.
  • இந்தியாவின் சமூகத் தொழில்முனைவோர் விருது 2019 என்ற விருதின் 10வது பதிப்பு சாந்தி ராகவன் & திபேஷ் சுதாரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
    • 2010 ஆம் ஆண்டில், சமூகத் தொழில்முனைவிற்கான ஸ்க்வாப் அறக்கட்டளை மற்றும் ஜூபிலண்ட் பாரதியா அறக்கட்டளை ஆகியவை இணைந்து சமூகத்  தொழில்முனைவோர் இந்தியா விருது மூலம் இந்தியாவில் சமூக கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கின்றன.
  • இந்தியாவில் முதல் முறையாக, மும்பையில் அரேபியக் கடல் பகுதியில் மிதக்கும் கூடைப் பந்து மைதானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலிஸா ஹீலி இலங்கைக்கு எதிராக 61 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து பெண்களின் T20I போட்டியில் அதிகபட்ச தனிநபர் எண்ணிக்கையை அடித்து உலக சாதனை படைத்தார்.
  • இந்திய ஜனாதிபதி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 2019 ஆம் ஆண்டின்  ஸ்வச்சதா தூதர் என்ற விருதை வழங்கினார்.
  • டேராடூனில் மின்சாரத் திருட்டைத் தடுத்து மின் சேமிப்பை ஊக்குவிக்க உத்தரகாண்ட் அரசு ‘உர்ஜகிரி’ என்ற ஒரு பொது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
    • மின் இழப்பு மற்றும் மின் திருட்டைத் தடுப்பதில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக உத்தரகாண்ட் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வலுவான வெள்ளியை உருவாக்கியுள்ளது. இது முந்தைய உலக சாதனையை விட 42% வலிமையானது.
  • மிடாக் சூறாவளி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 03 அன்று தென் கொரியாவைப் பலத்த மழை மற்றும் பலத்த காற்றுடன் தாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்