TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 10 , 2019 1747 days 721 0
  • அனுப்ரியா மதுமிதா லக்ரா என்பவர் விமான நிறுவனம் ஒன்றின் வணிக விமானத்தை இயக்கிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முதலாவது பழங்குடியினப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார். இவர் ஒடிசாவில் உள்ள மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மல்கான்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • பிஃபா அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில், ஈரான் இஸ்லாமியக் குடியரசானது கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக தற்பொழுது பெண் பார்வையாளர்களை கால்பந்து மைதானத்திற்குச் செல்ல அனுமதித்துள்ளது.
    • “நீலச் சிறுமி” என்று அழைக்கப்பட்ட ரசிகர் ஒருவர் ஒரு போட்டியில் பாரவையாளராக கலந்து கொள்ள சிறுவனாக ஆடை அணிந்ததற்காக சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டதின் பின்னணியில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • ஃபெனி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1.82 கன அடி தண்ணீரை இந்தியா எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
    • இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் திரிபுராவில் உள்ள சப்ரூம் எனும் நகரத்திற்கு குடிநீர் வழங்குவதாகும்.
  • “மகாத்மா காந்தி தேசிய தோழமைத் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன்  இணைந்துள்ளதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • இந்தத் திட்டமானது கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்குத் திறன்களை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த சிமோன் பைல்ஸ் என்பவர் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் 15வது உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவர் இந்த நிகழ்வில் மிகவும் சிறப்பாக அறியப்பட்ட பெண்மணியாக (மொத்தம் 21 பதக்கங்கள்) உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்