TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 12 , 2019 1745 days 859 0
  • பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்சா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தலா 150 இடங்களைக் கொண்ட 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான 60% செலவினங்களை மத்திய அரசு ஏற்க இருக்கின்றது.
    • இந்த நடவடிக்கையானது தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்த இருக்கின்றது.
  • உலகின் மிகப்பெரிய முப்பரிமாண அச்சுப் பொறியானது உலகின் மிகப்பெரிய முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட படகு ஒன்றை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் மைனே பல்கலைக் கழகம் இந்த 25 அடி நீளம் கொண்ட, 5,000 பவுண்டுகள் மதிப்புள்ள படகை உருவாக்கியது. மேலும் அதன் கடல் பயணத்திற்கான தகுதியும் நிரூபிக்கப் பட்டது.
  • பாலின வேறுபாடுகளை உடைத்தெறிதல் மற்றும் திருநங்கைகளின் சமூகத்தினருக்குச் சமத்துவத்தை உறுதி செய்தல் ஆகியவற்றிற்காக நாட்டின் முதலாவது திருநம்பி விமானியாக மாற 20 வயதான ஆடம் ஹாரியின் விமானப் பயிற்சிக் கட்டணங்களை ஏற்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    • ஆடம் ஏற்கனவே ஒரு தனியார் விமானிக்கா உரிமத்தை வைத்திருக்கின்றார். மேலும் அவர் ஒரு திருநம்பி என்பதால் அவரது குடும்பத்தினரால் அவர் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருக்கின்றார்.
  • மும்பை பல்கலைக் கழகத்தின் முதலாவது "அங்கீகரிக்கப்பட்ட" மாற்றுப் பாலின மாணவரான சந்தோஷ் லோண்டே (மாற்றிக் கொண்ட பெயர் ஸ்ரீதேவி) என்பவர் உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய  இரண்டு பிரிவுகளுடன் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளார்.
    • இந்தப் பல்கலைக் கழகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு "பாலினத்திற்கான மூன்றாவது பிரிவை" அறிமுகப் படுத்தியது. அதன் பின்னர் இந்தப் பிரிவில் ஸ்ரீதேவி தனது பெயரைப் பதிவு செய்தார்.
  • சந்திரயான் - 2 ஆர்பிட்டரின் சூரிய ஒளி மீதான x கதிர் கண்காணிப்பியானது தொடர்ச்சியான சூரிய ஒளிச் சிதறல்களை (எரிப்புகளை) கண்டறிந்துள்ளது. இதனால் சந்திரனில் தாதுக்கள் இருப்பதை சோதிக்கும் சந்திராயன் – 2ன்  திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது.
  • நெதர்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதரான வேணு ராஜமோனி என்பவர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜக்ஸ் மியூசியத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்” என்ற தலைப்பைக் கொண்ட தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • நெதர்லாந்தின் மன்னர் வில்லெம் – அலெக்சாண்டர் இந்த புத்தகத்தின் முதலாவது பிரதியை நெதர்லாந்து ராணி மெக்ஸிமா முன்னிலையில் பெற்றார். இவர்கள் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நினைவு நாணயத்தை வெளியிடுமாறு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நிதித் துறை அமைச்சர் சஜித் ஜாவித் என்பவர் அந்நாட்டின் நாணய அச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
  • லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் அடமான அடிப்படையில் கடன் வழங்கும் நிறுவனமான இந்தியா புல்ஸ் வீட்டுவசதி நிதியியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்புத் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்