TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 13 , 2019 1744 days 633 0
  • இந்திய மகளிர் குத்துச் சண்டை அணியானது ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை 48 கிலோ பிரிவில் மஞ்சு ராணி பெற்ற வெள்ளிப் பதக்கம் உட்பட நான்கு பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
  • கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்கோஜ் என்பவர் ஆஸ்திரியாவின் வியன்னாவில் 1 மணி 59:40 நிமிடங்களில் INEOS 1:59 என்ற போட்டியை நிறைவு செய்ததன் மூலம் 2 மணி நேரத்திற்குள்ளான ஒரு மாரத்தான் போட்டியை ஓடி நிறைவு செய்த முதல் நபராக உருவெடுத்துள்ளார்.
  • சீனாவில் நடைபெற்ற 2019 WTA (Women Tennis Association - மகளிர் டென்னிஸ் சங்கம்) வுஹான் ஓபனின் 6வது பதிப்பில் பெலாரசைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆரினா சபாலெங்கா என்பவர் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
    • இந்த வெற்றியின் மூலம், சீனாவின் வுஹானில் அடுத்தடுத்துப் பட்டங்களை வென்ற முதலாவது வீரர் என்ற பெருமையை ஆரினா பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்