TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 16 , 2019 1741 days 750 0
  • உகாண்டாவில் நடத்தப்பட்ட 64வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகரான பி தனபால் கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 6வது பதிப்பானது திருவண்ணாமலையில் நடைபெற இருக்கின்றது.
  • தேசிய அஞ்சல் வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2019 ஆம் ஆண்டின் தக் சேவா விருதுகளை தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு வழங்கினார்.
    • மேலும் உலக அஞ்சல் தினத்தின் 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில் விருதுகள் குறித்த சிறு புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
  • தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷயன் என்பவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களால் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆலோசனைக் குழுவின் (Medical Advisory Council - MAC) உறுப்பினராகப் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
    • MACயின் மூலம் மாநிலங்கள், மருத்துவக் கல்வி மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான தங்களது கவலைகளை ஆணையத்தின் முன் வைக்கும்.
  • தனது ஒரு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டபடி, திருநங்கைகளுக்கும் ராஜஸ்தான் மாநில அரசு வேலையின்மை படித் தொகையை நீட்டித்துள்ளது. இவர்கள் தற்பொழுது மாதத்திற்கு ரூ 3,500ஐப் பெற இருக்கின்றனர்.
    • பட்டம் பெற்ற திருநங்கைகள் இச்சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • முதல் முறையாக, கேரளாவில் உள்ள நிலத்தடி பாறை அமைப்புச் சூழலில் ஒரு புதிய விலாங்கு போன்ற அயிரை மீன் இனமானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு பாங்கியோ புஜியா என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
    • விலாங்கு இனமானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவையாகும்.
  • எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின்  மிகச்சிறிய உறுப்பினர் நாடுகளில் ஒன்றான ஈக்வடார் ஆனது நிதிப் பிரச்சினைகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 14 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியமானது (International Monetary Fund - IMF) இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ‘உள்நாட்டுத்  தேவையானது’ எதிர்பார்த்த கண்ணோட்டத்தை விட பலவீனமாக இருப்பதுவே இதற்கு காரணம் என்று அந்த அமைப்பு மேற்கோள் காட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்