TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 19 , 2018 2500 days 808 0
  • திருமண வயதை எட்டிய ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெற்றோரோ,  காப் எனப்படும் கட்டப் பஞ்சாயத்தோ அல்லது இது போன்ற அமைப்புக்களோ அவர்களை கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருக்கிறது. சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் மீது எந்த விதமான தாக்குதல்கள் நடத்தினாலும் அது ‘சட்ட விரோதமானது‘ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
  • நடப்பாண்டு (2018) முதல் ஹஜ் யாத்திரை செல்வோருக்கான மானியம் நிறுத்தப்பட உள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவானது சிறுபான்மையினரின் வளர்ச்சி மற்றும் கவுரவத்தை அடிப்படையாகக் கொண்ட அமைச்சகத்தினுடைய கொள்கையின் ஒரு பகுதியாகும். அப்சல் அமானுல்லா குழுவின் பரிந்துரையின் பேரிலும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்