TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 21 , 2019 1736 days 721 0
  • டெல்லி சுற்றுலாக் கழகமானது டெல்லி அரசாங்கத்துடன் இணைந்து, அந்நகரத்தின் நாகரிகம் மற்றும் அதன் சிறப்பான வரலாற்றைக் கொண்டாடும் வகையில் ‘ஷாப்பூர் ஜாட் இலையுதிர் விழா’வின் இரண்டாவது பதிப்பை ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றது.
    • ஷாப்பூர் ஜாட் நகரின் பழமையான கிராமங்களில் ஒன்றாகும். மேலும் குயவர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், பட்டறைகள், பெண்கள் அழகு சாதன கடைகள், வரலாற்றுக் கல்லறைகள், சிற்றுண்டியகங்கள் மற்றும் பலவற்றையும் இது கொண்டுள்ளது. இது அலாவுதீன் கில்ஜியின் இடைக்கால வரலாற்று நகரான சிரி கோட்டையின் இடிபாடுகளுக்கு அருகில் உள்ளது.
  • குஜராத் பிரிவைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அனுப் குமார் சிங் தேசிய பாதுகாப்புப் படையின் பொது இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • 1984 ஆம் ஆண்டில் பயங்கரவாதம் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களை எதிர்ப்பதற்கான ஒரு கூட்டாட்சி மற்றும் அவசரகாலப்  படையாக  தேசிய பாதுகாப்புப்  படை உருவாக்கப் பட்டது. தேசிய பாதுகாப்புப்  படையின் 35 வது எழுச்சி தினம் சமீபத்தில் அக்டோபர் 15 ஆம் தேதியன்று ஹரியானாவில் உள்ள மானேசர் என்னுமிடத்தில் கொண்டாடப்பட்டது.
  • எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி) ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா ஐ.ஏ.எஸ் என்ற அதிகாரியை மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள் - பிரேசில் மற்றும் வெனிசுலா - ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளன.
    • 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையானது, 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவையில் 14 உறுப்பினர்களை 2020 ஜனவரி 1 முதல் மூன்று ஆண்டு காலத்திற்குத் தேர்வு செய்தது.
    • அதன் விதிகளின் கீழ், புவியியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த பிராந்தியங்களுக்கு (ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கன்) என்று இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.
  • 2019 ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர்  காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6% ஆக உள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாக மாறியுள்ளது.
    • அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீனாவின் வேலைவாய்ப்பு  மற்றும் ஊதிய நிலைமையை மோசமாக்கியுள்ளது. இதனால் பெரு நிறுவனங்களும் சீனாவில் மூலதன முதலீடு செய்வதைத் தவிர்த்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்