TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 30 , 2019 1727 days 658 0
  • 2006 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வட இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக படம் பிடிக்கப்பட்ட “அற்புதமான பயணம் : ஜனநாயகத்தின் கதைகள் மற்றும் நேரங்கள்” எனும் ஆவணப் படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள திரைப்பட விழாக்கள், பல்கலைக் கழகங்கள், மற்றும் உரிமைச் சமூக மன்றங்களில் திரையிடத் திட்டமிடப்பட்டு இருக்கின்றது.
    • இது பொருளாதாரவியலில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியாலும் ஒளிப்பதிவாளரான ரனு கோஷ் என்பவராலும் படம் பிடிக்கப்பட்டது.
  • புது தில்லியில் நடைபெற்ற முதலாவது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்  துறை அமைச்சகத்தின் புதுமையான நிறுவனங்களுக்கான (Start-Up) மாநாட்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் புதிய முயற்சிகளின் ஒரு வரிசையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்.
  • அறிவியல் இலக்கியத்தில் இந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு எண்ணத்தில் உத்தரப் பிரதேச அரசால் லக்னோவில் முதல் தேசிய இந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு நடத்தப் பட்டது.
  • 1969ஆம் ஆண்டில் பீகாரின் ராஜ்கீரில் கட்டப்பட்ட விஸ்வ சாந்தி ஸ்தூபியின் (உலக அமைதிச் சின்னம்) 50வது ஆண்டு விழாவின் ஒரு கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் உரையாற்றியதோடுப் புத்தரின் போதனைகள் பற்றிய விழிப்புணர்வையும் புத்தரது அமைதிக்கான செய்தியையும் பற்றி அவர் உரையாற்றினார்.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இந்தியாவில் நானோ மருந்துப் பொருட்களின் மதிப்பீடுகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டு இருக்கின்றார்.
    • இந்த வழிமுறைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ்வரும் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மற்றும் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டது.
  • அக்டோபர் 31ம் தேதியன்று முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கியப் பேரரசு விலக இருக்கும் சில தினங்களுக்கு முன்பு, 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற நினைக்கும் பிரிட்டனின் விலகுதலுக்கு ஒரு நெகிழ்வுக் காலத்தை ஏற்படுத்திட வேண்டி அந்நாடு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிரியாவில் அமெரிக்க ராணுவப் படைகளால் ஓர் இரவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இஸ்லாமிய அரசுத் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதியின் மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துளார்.
    • 1971ம் ஆண்டில் ஈராக்கில் பிறந்ததாக அறியப்படும் பாக்தாதி 2013ம் ஆண்டில் இஸ்லாமிய அரசின் காலிப்பாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.
  • கரீபிய கிரிக்கெட் அணியான பப்புவா நியூ சினியா ஆனது கென்யாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2020 டி-20 உலகக் கோப்பையில் தங்களது முதலாவது பங்கேற்பை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்