TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2019 1726 days 733 0
  • முதலாவது உலகப் போரின் போது ஒட்டமான் துருக்கியர்கள் (தற்போதைய துருக்கி) ஆர்மீனியர்களைக் கொன்றது ஒரு "இனப் படுகொலை" என்று அங்கீகரிக்கும் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையானது ஒருமனதாக வாக்களித்துள்ளது.
    • 1915 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரை ஆர்மீனியாவைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் துருக்கியர்களால் திட்டமிட்டுக் கொலை செய்யப் பட்டனர்.
  • ஆப்பிள் அதன் எமோஜி வழங்கல்களை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட ஒவ்வொரு மனித எமோஜிகளின் பைனரி அல்லாத பதிப்புகளையும் இணைத்துள்ளது. ஆண்ட்ராய்டு இதை 2019 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.
  • அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பின்படி, 2018 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிலவரப் படி அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழி இந்தி ஆகும். அமெரிக்காவில் 8.74 லட்சம் மக்கள் இந்தி மொழி பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து குஜராத்தி (4.19 லட்சம்) மற்றும் தெலுங்கு (4 லட்சம்) மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர்.
    • அமெரிக்காவில் தமிழ் மொழி பேசும் பேசுபவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சமாக உள்ளது.
  • ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெறும் மிகப்பெரிய இனத்தவராக இந்தியர்கள் உள்ளனர்.
    • 2019 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்ட மொத்தம் 1.27 லட்சம் நபர்களில் 28,740 நபர்கள் இந்தியர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்