புது தில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச சூரியஒளிக் கூட்டமைப்பின் (International Solar Alliance - ISA) இரண்டாவது அமர்வில், எரித்திரியா மற்றும் செயிண்ட் கிட்டிஸ் & நெவிஸ் ஆகிய இரு நாடுகள் ISA கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது ISAவில் கையெழுத்திட்ட மொத்த நாடுகளின் எண்ணிக்கையை 83 ஆக உயர்த்துகின்றது.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI (இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - Telecom Regulatory Authority of India) ஒரு அழைப்பானது சந்தாதாரரால் பதிலளிக்கப் படாமலோ அல்லது அந்த அழைப்பு நிராகரிக்கப் படாமலோ இருக்கும் சமயத்தில் அத்தொலைபேசி அழைப்பிற்கான நேரத்தை கைபேசிகளுக்கு 30 வினாடிகளாகவும் தரைவழி (லேண்ட்லைன்) தகவல்வட தொலைபேசிகளுக்கு 60 வினாடிகளாகவும் நிர்ணயித்துள்ளது.
சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள CHACE-2 கருவியானது, சந்திரனின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் ஆர்கான் - 40 என்ற வாயுவினைக் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனமானது சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தில் (International Air Transport Association - IATA) உறுப்பினராக சேர்ந்துள்ளது. இது சர்வதேச சந்தைகளில் வலுவான கூட்டிணைவுகளை வளர்க்க அந்த விமான நிறுவனத்திற்கு உதவ இருக்கின்றது.
IATA என்பது 290க்கும் மேற்பட்ட விமானங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விமானத் தொழில் துறைக்கான ஒரு உலகளாவிய வர்த்தகச் சங்கமாகும்.