TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2019 1721 days 737 0
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அதன் கணினி அமைப்புகளில் மால்வேர் (தரவுகளைத் திருடுவது) இருப்பதை இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India - NPCIL)  உறுதிப் படுத்தியுள்ளது. NPCIL ஆனது அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். அணுசக்தித் துறையானது பிரதம மந்திரி அலுவலகத்தின் கீழ் வருகின்றது.
  • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரமஹம்ச யோகானந்தாவின் 125வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அவர் குறித்த ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார். யோகானந்தா மேற்கு நாடுகளில் யோகாவின் தந்தை என்று அறியப் படுகின்றார்.
  • சமீபத்தில் புஷ்கர் கண்காட்சியானது ராஜஸ்தானில் நடத்தப் பட்டது. இது புஷ்கர் (ராஜஸ்தான், இந்தியா) நகரில் ஒவ்வொரு ஆண்டும் பல நாட்கள் நடைபெறும் கால்நடைக் கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவாகும். இது ஒட்டகம், குதிரை மற்றும் கால்நடை குறித்த இந்தியாவின் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாகும்.
  • கிருஷ்ணகிரிக்கு அருகிலுள்ள வேப்பன ஹல்லியில் 2000 ஆண்டுகள் பழமையான பாறைக் கீறல்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டன. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பழமையானது மற்றும் மிகப் பெரியது என்று கருதப் படுகின்றது.
  • 1 கிலோ அரிசிக்கு 1 கிலோ நெகிழிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியை தெலுங்கானாவின் முலுகு மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடத்தப் பட்டது. இது உலகின் சிறந்த புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இது அரபு நாடுகளில்  மிகப்பெரிய ஒரு நிகழ்வாக கருதப் படுகின்றது.
  • "செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும்" நோக்கத்துடன் ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா 'சங்கம் 2019-20' ஆகும்.
    • இந்த ஆண்டுக்கான  கருப்பொருள் “நம் தேசத்தை உருவாக்குவோம்” என்பதாகும்.
  • லடாக் யூனியன் பிரதேசமானது “ஜி.பி பந்த் இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்” ஒரு புதிய பிராந்திய மையத்தைப் பெறுகிறது.
    • இந்நிறுவனத்தின் தலைமையகம் கோசி-கட்டர்மாலில் (உத்தரகாண்ட்) உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் தனுஷ் படைப் பிரிவைப் பெறவும், 2022 ஆம் ஆண்டுற்குள் அனைத்து 114 துப்பாக்கிகளையும் பெறவும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
    • தனுஷ் 1980 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்வீடிஷ் போபர்ஸ் வகைத் துப்பாக்கியின் மாதிரியைக் கொண்டு உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்