TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2019 1720 days 784 0
  • இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை நகர்ப்புறப் போக்குவரத்துத் துறையில் 1 பில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும் என்று ஜெர்மனியப் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் உறுதியளித்துள்ளார்.
  • “நீதிக்காக சமமான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி” என்ற தலைப்பின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடானது இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது.
  • ஒடிசா மாநிலமானது “ஒரே பாரதம் வளமான பாரதம்” என்ற திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவுடன் இணைத்துக் குறிக்கப் பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் “உத்கல்” என்றும் அழைக்கப் படுகின்றது. இதன் பொருள் சிறந்த கலை மற்றும் கலாச்சாரத்தின் நிலம் என்பதாகும்.
  • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட  சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையமானது (Environment Pollution (Prevention and Control) Authority EPCA) தில்லி மற்றும் தேசியத் தலைநகர்ப் பகுதியில் பொதுச் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இது அங்கு கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பதைத் தடை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்