TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 10 , 2019 1716 days 698 0
  • செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைய இருக்கின்றது.
    • இந்தியாவில் இந்த வகையில் அமையவிருக்கும் முதலாவது மருத்துவக் கல்லூரி இதுவேகும்.
  • நாடு முழுவதும் கிடப்பில் உள்ள வீட்டு வசதித் திட்டங்களைப் புதுப்பிப்பதற்காக 25,000  கோடி ரூபாய் நிதியை மாற்று முதலீட்டு நிதியாக (Alternative Investment Fund AIF) வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • மாற்று முதலீட்டு நிதி என்பது அதன் முதலீட்டாளர்களின் நலனுக்காக வரையறுக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கையின்படி முதலீடு செய்வதற்காக சில முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளைச் சேகரிப்பதாகும்.
  • இந்திய நிலத் துறைமுக ஆணையத்தின் (Land Ports Authority of India - LPAI) தலைவராக மிஸ்ராவை நியமிக்க நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது தனது ஒப்புதலை அளித்துள்ளது.
    • LPAI ஆனது இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பயணிகள் மற்றும் பொருட்களின் எல்லை தாண்டிய போக்குவரத்திற்காக, அதற்குரிய வசதிகளை உருவாக்கி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, அதை நிர்வகிக்கின்றது.
  • சாலைத் தொழில்நுட்பம் (நிலையான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்) குறித்த 5வது சர்வதேச மாநாடானது சமீபத்தில் புது தில்லியில் நடத்தப்பட்டது.
    • இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘பசுமை மற்றும் நிலையான சாலைகளுக்காக இருக்கக் கூடிய வளங்களின் திறனுள்ள பயன்பாடு’ என்பதாகும்.
  • குஜராத் மாநிலத்தின் முதலாவது மண்ணெண்ணெய் அற்ற மாவட்டமாக காந்தி நகர் மாவட்டம் உருவெடுத்துள்ளது.
  • முதன்முறையாக லடாக் இலக்கியத் திருவிழாவானது லடாக்கின் லே மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது.
  • தாய்லாந்தின் தேசியப் பூங்காவில் உள்ள ஹேவ் நரோக் நீர் வீழ்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஆறு யானைகள் இறந்தன.
    • இந்த நீர்வீழ்ச்சியானது காவோ யாய் தேசியப் பூங்காவில் உள்ளது. இந்த தேசியப் பூங்காவில் சுமார் 300 காட்டு யானைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்