TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 14 , 2019 1712 days 710 0
  • 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ''தீவிரவாதத்திற்கான நிதியைத் தடுத்தல்'' என்ற மாநாட்டின் அடுத்தப் பதிப்பை இந்தியா நடத்த இருக்கின்றது.
    • இது 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிதியியல் புலனாய்வுப் பிரிவுகளால் (Financial Intelligence Units - FIUs) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் கூட்டாக சேர்ந்து “தி எக்மாண்ட் குழுமம்” என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் சமூகப் பிரிவான நாஸ்காம் அமைப்பு மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான எம்ஃபாஸிஸ் ஆகியவை 11வது நாஸ்காம் சமூகப் புத்தாக்க மன்ற (NASSCOM Social Innovation Forum - NSIF) விருதின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளன.
  • உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில், ராஞ்சியில் உள்ள சர்வதேச அரங்க வளாகத்தில் நடந்த தியோதர் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ அணியானது இந்தியா ‘சி’ அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • உலகளாவியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் நடைபெறும் விவாத அமர்வான பாரிஸ் அமைதி மன்றத்தின் இரண்டாவது பதிப்பானது பாரிஸில் நடைபெற்றது.
  • உலகக் கருணை (இரக்க) தினமானது நவம்பர் 13 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்புத் தினமாகும்.
    • இது பல்வேறு நாடுகளின் கருணை சார்ந்த அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணியான “உலகக் கருணை இயக்கத்தால்” 1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்