TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 16 , 2019 1710 days 793 0
  • குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்க் குழந்தைகளின் எழுத்தாளரான தேவி நாச்சியப்பன் மற்றும் கவிஞர் சபரிநாதன் ஆகியோருக்கு  2019 ஆம் ஆண்டின் பால் சாகித்ய புராஸ்கார் விருது வழங்கப்பட்டது.
    • குழந்தைகளின் இலக்கியத்திற்காக அவரது வாழ்நாள் பங்களிப்பிற்காக தேவி நாச்சியப்பன் (அக்கா தெய்வானை) என்பவருக்கும் தனது ‘வால்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக சபரிநாதன் என்பவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
  • கோவாவின் கடற்கரை சோதனை நிலையத்தில், தேஜாஸ் என்ற கடற்படையைச் சேர்ந்த இலகு ரக போர் விமானத்தின் (light combat aircraft - LCA) இரவு நேர “ஒடுக்கப்பட்ட தரையிறக்கத்தை” நிகழ்த்தியுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defence Research and Development Organisation DRDO) அறிவித்துள்ளது.
  • ஒரு விண்கலத்தால் முதல்முறையாகப் பார்வையிடப்பட்ட தொலைதூர அண்ட அமைப்பான “அல்டிமா துலே” ஆனது பூர்வீக அமெரிக்க பவத்தான் மொழியில் அரோகோத் அல்லது 'வானம்' என்று நாசாவால் மறுபெயரிடப்பட்டுள்ளது.
    • இதன் முந்தையப் பெயரான ‘அல்டிமா துலே’ ஆனது இனவெறி என்ற பொருளைக் கொண்டிருந்தது. இது நாசி வட்டாரங்களிலும் ஆரிய - மேலாதிக்க சதி கோட்பாட்டாளர்களிடையேயும் பிரபலமானதாக விளங்கியது.
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று ‘ரசகுல்லா தினத்தை’ மேற்கு வங்க மாநிலம் அனுசரித்தது. இது ரசகுல்லாக்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • இந்தியாவின் மொத்த பணவீக்கமானது (WPI - wholesale inflation) அக்டோபரில் 0.16% ஆக குறைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மிகக் குறைவான WPI இதுவாகும்.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) 7வது ‘ஆசியப் பிராந்திய பாதுகாப்பு மன்றக்’ கூட்டமானது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
    • 'இயற்கை மற்றும் மக்களுக்கான பசுமையான ஆசியா' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 170 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களைத் தடுப்பதற்கான பல்வேறு ஏற்றுக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து இவர்கள் விவாதித்தனர்.
  • அமேசான் நிறுவனத்தில் பொருள்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் உண்மையான பொருட்களைப் பெறுவதை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் “சுழியத் திட்டம்” என்ற ஒரு நடவடிக்கையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    • இது விற்பனையின் போது போலிப் பொருள்களை அடையாளம் காண, அதனைத் தடுக்க, அதனை அகற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • அக்டோபர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து குடிமக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு பொலிவியாவின் அதிபர் எவோ மோரலஸ் தனது பதவியிலிருந்து விலகினார். எதிர்க்கட்சி செனட்டரான ஜீனைன் அணீஸ் என்பவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11 தேதியன்று அந்நாட்டின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்