TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 19 , 2019 1707 days 689 0
  • தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஒரு தேர்வுக் குழுவானது 1984 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு. ராஜகோபாலனின் பெயரை மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது.
  • ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே பொறுப்பேற்றார்.
    • 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தனியுரிமை என்பது “வாழ்க்கை மற்றும் தனிச் சுதந்திரத்திற்கு உள்ளார்ந்ததாகும்” என்று தீர்ப்பளிக்கப்பட்ட அமர்வில் இருந்த நீதிபதிகளில் இவரும் ஒருவராவார்.
  • குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், மாநிலங்களவையின் 250வது அமர்வு நடத்தப் பட்டது. ‘மாநிலங்களவையின் பங்கு மற்றும் சீர்திருத்தங்களின் அவசியம்’ என்பது குறித்த சிறப்பு விவாதங்கள் மாநிலங்களவையில் நடைபெற்றன.
  • 19வது ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினமானது நவம்பர் 15 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது. இது பீகார் மறுசீரமைப்புச் சட்டம், 2000 என்ற சட்டத்தின் மூலம் நிறுவப் பட்டது.
    • மேலும் நவம்பர் 15 ஆம் தேதியானது புகழ்பெற்ற பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்த தினமாகும் (நவம்பர் 15, 1875 - 9 ஜூன் 1900).
  • தேசிய வலிப்பு நோய் தினமானது நவம்பர் 17 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது. இந்தியாவின் வலிப்பு நோய் அமைப்பானது இந்தத் தினத்தைக் கடைபிடிக்கின்றது.
  • இலங்கையின் சர்ச்சைக்குரிய போர்க்கால பாதுகாப்புத் துறைச் செயலாளரும் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே என்பவர் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் போட்டியாளரான சஜித் பிரேமதாசாவை தோற்கடித்துள்ளார்.
  • “நெகிழியிலிருந்து விடுபடுதல்” என்ற ஒரு சுற்றுச்சூழல் குழுவினால் நடத்தப்பட்ட தணிக்கையின் படி, கோகோ கோலா நிறுவனமானது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் மிகப்பெரிய நெகிழி மாசுபடுத்தியாக அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்த நிறுவனத்தைத்  தொடர்ந்து நெஸ்லே மற்றும் பெப்சி ஆகிய நிறுவனங்கள் நெகிழி மாசுபடுத்திகளாக உள்ளன.
  • இந்தியக் கடற்படை மற்றும் கத்தார் அமீரக கடற்படை ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்படும் சயீர்-அல்-பஹ்ர் (கடலின் கர்ஜனை) என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சியின் தொடக்கப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை நடத்தப் படுகின்றது.
    • தோஹாவில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த இருதரப்பு கடல் பயிற்சியில் கடல்சார் நடவடிக்கை, வான் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு மற்றும் சமூக & விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை உள்ளடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்