TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 23 , 2019 1703 days 896 0
  • ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான மயங்க் பிரதாப் சிங் என்பவர் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற நீதித் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து இந்தியாவின் மிக இளைய வயது கொண்ட நீதிபதியாக அவர் உருவெடுத்துள்ளார்.
    • முன்னதாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றமானது நீதித் துறை பணித் தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 23லிருந்து 21 ஆகக் குறைத்து இருந்தது.
  • இந்திய வழக்குரைஞர் கழகமானது எந்தவொரு வழக்கறிஞரும் எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றுவதற்கு முன்பாக மாவட்ட/தாலுக்கா நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கண்டிப்பாகப் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற ஒரு புதிய விதியை பரிந்துரைத்துள்ளது.
  • துணை விமானியான ஷிவாங்கி என்பவர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று கொச்சியில் ஒரு டோர்னியர் விமானத்தை இயக்க இருப்பதன் மூலம் இந்தியக் கடற் படையின் முதலாவது பெண் விமானியாக உருவெடுக்க இருக்கின்றார்.
  • ஆக்ஸ்போர்டு அகராதியானது 2019 ஆம் ஆண்டிற்கான சொல்லாக “காலநிலைக்கான  அவசரநிலை” என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வார்த்தையின் மிக அதிகமான பயன்பாடு நூறு மடங்கு அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த அகராதி இந்த சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • 33 வயதான முன்னாள் ஹாக்கி வீரரான சித்தரேஷ் நடேசன் என்பவர் ஒரு உடல் கட்டமைப்பாளராக மாறினார். அதன் பின்பு உடற் கட்டமைப்பாளர்கள் மத்தியில் இவர் ‘இந்தியன் மான்ஸ்டர்’ என்று அழைக்கப் பட்டார். தற்போது இவர் 90 கிலோ எடைப் பிரிவில் 2019 ஆம் ஆண்டின் “மிஸ்டர் யுனிவர்ஸ்” (புரோ) என்ற பட்டத்தை வென்ற முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளார்.
    • தென் கொரியாவில் நடைபெற்ற 11வது உலக உடற் கட்டமைப்பு மற்றும் உடல்சார் விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் (WBPF - World Bodybuilding and Physique Sports Championship) இவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்