TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2019 1701 days 741 0
  • கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, அசாம் மாநில அரசானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் தயாரிக்கப்பட்ட “நிலக் கொள்கை 2019” ஐ வெளியிட்டுள்ளது. இதுபோன்ற கடைசி அறிக்கை 1989 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இந்திய அரசாங்கத்தின் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து, 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை மணிப்பூரில் உள்ள இம்பாலில் 8வது “சர்வதேசச் சுற்றுலா சந்தையை” ஏற்பாடு செய்துள்ளது.
  • மாட்ரிட்டில் நடந்த டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி ஸ்பெயினுக்காக 6வது டேவிஸ் கோப்பைப் பட்டத்தை வென்றுள்ளார். அவர் ஷபோவலோவை 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்