TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2019 1694 days 710 0
  • கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் தமிழகத்தின் முன்மொழிவிற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
  • நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிய ஆளுநர் மாளிகையை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக நிறுவ தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையானது பரிந்துரை செய்துள்ளது.
    • ஆட்சியர் மாளிகை என்று அழைக்கப்படும் இது டான்ஸ்போர்க் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ளது. இது டேனியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர் 1845 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கையகப் படுத்தப்பட்டது.
  • இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணியைச் சேர்ந்த நீனு இட்டேராஹ் என்பவர் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமைச் செயல்பாட்டு மேலாளராக (Principal Chief Operations Manager - PCOM) பொறுப்பேற்றுள்ளார்.
    • மண்டல ரயில்வேயில் பதவியேற்க இருக்கும் முதலாவது பெண் அதிகாரி இவராவார்.
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தால் மாநிலங்களவையில் வழங்கப்பட்ட தரவுகளின் படி, கடைசிகட்ட எண்ணிக்கையில், அசாம் மாநில நதிகளில் 962 கங்கை டால்பின்களும் (அல்லது பிளாட்டானிஸ்டா கங்கெட்டிகா) உத்தரப் பிரதேச மாநில நதிகளில் 1,275 கங்கை டால்பின்களும் இருக்கின்றன.
  • முதலாவது இந்திய - ஜப்பான் 2 + 2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்காக இந்தியப் பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் ஜப்பானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரை புது தில்லியில் சந்தித்தனர்.
  • சோமா ராய் பர்மன் என்பவர் பொது கணக்குக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Controller General of Accounts - CGA) புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • இவர் 24வது CGA ஆவார். இந்தப் புகழ்பெற்ற பதவியை வகிக்கும் ஏழாவது பெண்மணி இவராவார். இவர் ஜே.பி.எஸ் சாவ்லாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாகாலாந்து மாநிலமானது தனது 57வது மாநில உருவாக்க தினத்தை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று கொண்டாடியது. இது 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று நாட்டின் 16வது மாநிலமாக உருவாகியது.
  • பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் மற்றும் வர்த்தகர்கள் & சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 2020 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு கோடி பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு “ஒரு முயற்சியைத்” தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்